Choose a track to play
Yeah
Hey-hey-hey
You gotta keep movin' if you're out with your drama
'Cause there's plenty other girls who wanna get with me mama
You can see me ballin', just by lookin' at my sneakers
And my credit card got really good features
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா? இல்லை பொய்தான் என்பதா?
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே
ஒரு சின்னத் தாமரை (you're my) என் கண்ணில் பூத்ததே (true love)

Let's do this
Woo
உன் பெயர் கேட்டாலே, அடி பாறையும் பூப்பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப்போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
(Hey) Which you gonna say chennai vote player
பெண்ணை பாக்கும்போது பத்திக்கிச்சு fever
(Hey) விடை தருவதில் I'm a gentle palyer
கண்ணின் ஓரம் தெரிகின்ற காதல் ஒரு fire (fire-fire)
உன் குரல் கேட்டாலே, அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மோட்சத்தினை சேரும்
அனுமதி கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடைசாயும்
உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது