Elige una pista para reproducir
ஏலே மச்சி-மச்சி, தல சுத்தி-சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி எட்டி-எட்டி பாக்குது என்னாச்சு?
அட dollar போல போத ஏறிபோச்சு
நம்ம ரூபா போல புத்தி எறங்கிபோச்சு
போத ஏறினா கொஞ்சம் ஞானம் பொறக்குது
போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது
ஏலே மச்சி-மச்சி, தல சுத்தி-சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி எட்டி-எட்டி பாக்குது என்னாச்சு?
ஏதாச்சும் போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல
தாய்பாலும் போத தரும், சாராயம் போத தரும்
ரெண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல
தாய் பாலின் போதை சில மாதம் மட்டும்
சாராய போதை நாம் வாழும் மட்டும்
போதை மாறலாம் உன் புத்தி மாறுமா?
புத்தர் சொல்லியும் நாய்வாலு நிமிருமா?
ஏலே மச்சி-மச்சி, தல சுத்தி-சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி எட்டி-எட்டி பாக்குது என்னாச்சு?
வாழ்க்கை புதையலப்பா வலுத்தவன் எடுத்துகப்பா
அவன்-அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா?
அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தா இந்த மண்ணு தாங்காதப்பா
நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்
சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற
இமய மலையில வந்து ice'u விக்கிற
ஏலே மச்சி-மச்சி, தல சுத்தி-சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு
என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி எட்டி-எட்டி பாக்குது என்னாச்சு?