Sencillo / Pista
ஒரு நாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒரு நாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா