மருவத்தூர் மண்ணிலே அவதரித்த தெய்வமாம்
அந்த தெய்வத்தின் சன்னிதியில் எல்லாம் சம்மதமாம்
அந்த மருவத்தூரிலே அடிகள் என்னும் மனிதனாம்
அந்த மனித சொல்லுக்குள்ளே மாய சக்திகளாம்
கண்டேனம்மா
கண்டேனம்மா கடவுளம்மா
கடவுளோ ஒரு மனிதனம்மா
மனிதருக்குள் மகத்துவமா
உணர்ந்து கொண்டேன்
அனுபவம் சொல்ல வருமா
கண்டேனம்மா (உன்னை அம்மா)
கடவுள் அம்மா (சக்தியம்மா)
கடவுளோ (கலியுகத்தில்)
மனிதனம்மா (அடிகளம்மா)
மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
மகத்துவமா (நீதானம்மா)
உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளே)
அனுபவம் சொல்ல வருமா
கண்டேனம்மா கடவுளம்மா
கடவுளோ ஒரு மனிதனம்மா
சொந்தம் இருந்தும் மண்மீதிலே
கேட்பார் இன்றி இருந்தேன் அம்மா
சிந்தும் வசந்தம் மருவூரிலே
உனை தேடியே நடந்தேனம்மா
மகனே என்றோர் குரலே ஒலிக்க
ஒலியில் கடவுள் கண்டேன்
கண்டேன் அம்மா கடவுளம்மா
கடவுளோ ஒரு மனிதனம்மா
மருவத்தூரு மண்ணிலே அவதரித்த தெய்வமே
அம்மா உந்தன் முன்னிலையில் எல்லாம் சம்மதமே
அந்த மருவத்தூரிலே அம்மா உந்தன் பாலகனாம்
பாலகன் சொல்லிடும் வாக்கினில் நாளும் பாய்ந்து வந்திடும் சக்தியம்மா
சக்தியம்மா சக்தியம்மா சரணம் அம்மா
முதல்முறை உன்னை அழகு பீடத்தில்
அம்மன் கோலத்தில் இருக்க பார்த்து வந்தேன்
மறுமுறை இரவு நேரத்தில் கனவு கட்சியில் அடிகளார் கண்டேன்
நிஜம் இது காலை நேரத்தில் சித்தர் பீடத்தில் நடையில் காத்திருந்தேன்
நடந்திடும் பாதம் இரண்டிலும் தாயின் சாயலை கண்டு உருகி நின்றேன்
பார்த்த கண்ணிரண்டில் நீர் பெருகுதம்மா
வார்த்தை தொண்டைகுள்ளே அடைத்துக் கொண்டதம்மா
தெய்வத்தை பார்த்து விட்டால் பேச முடியுமா
பிறந்த குழந்தையை போல் மனசு ஆனதம்மா
யார் சொன்னதோ கடவுள் இல்லை என
ஆதிபராசக்தி அன்னையம்மா
அடிகளாரு ரூபம் கொண்டவளே
மனித வடிவில் தெய்வம் வந்தவளே
கண்டேன் அம்மா (உன்னை அம்மா)
கடவுள் அம்மா (சக்தியம்மா)
கடவுளோ (கலியுகத்தில்)
மனிதனம்மா (அடிகளம்மா)
மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
மகத்துவம் (நிதானம்மா)
உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளை)
அனுபவம் சொல்ல வருமா
ஆதிபராசக்தி அன்னையம்மா
அடிகளாரு ரூபம் கொண்டவளே
மனித வடிவில் தெய்வம் வந்தவளே
அனுபவமாய் நெஞ்சில் நின்றவளே
என்றும் என்னைக் காத்து வந்தருளே