Elige una pista para reproducir
ம்ம்... ம்ம்... ஹஹஹா...
ம்ம்... ம்ம்... ஹஹஹா...
நெல்லின் மணி போல்
நெஞ்சில் வளர்ந்த நினைவுகளே...
கள்ளமறியா கண்ணில் சுமந்த கனவுகளே...
ஓ... தென்றலே நீ ஓடி வா
வான் மேகமே பூ தூவ வா
நீ வரும் நாள் நாளை வாழ்த்தி பாடவா
நெல்லின் மணி போல்
நெஞ்சில் வளர்ந்த நினைவுகளே...
கள்ளமறியா கண்ணில் சுமந்த கனவுகளே...
சின்னஞ்சிறு வயது முதல்
பின்னிவந்த பாச மலர்
கன்னி இளம்பருவம் வந்து
கண் சிமிட்டும் பாவை மலர்
சொந்தம் என்றும் தொடர் கதைதான்
சூழ்நிலைகள் விடுகதைதான்
அன்பு உள்ள உறவுகளோ
ஆயுள் வரை வளர்பிறை தான்
காதல் வானம் திறந்தது
இன்று வானம் பாடி பறந்தது
நெல்லின் மணி போல்
நெஞ்சில் வளர்ந்த நினைவுகளே...
கள்ளமறியா கண்ணில் சுமந்த கனவுகளே...
ஆ... வெண்பனியில் ஆடைக்கட்டி
கண்சிமிட்டும் பூ வனங்கள்
பூ வனத்துப் புல்வெளியில்
புன்னகைப் பூ பால் முகங்கள்
தென் பொதிகை தாய் கொடுத்த
பெண்கள் என்னும் சீதனங்கள்
பெண்களுடன் பாட்டிசைக்கு
தேன் எடுக்கும் வண்டினங்கள்
ஆடிப் பாடி பறந்தது
சுகம் தேடி தேடி மறந்தது
நெல்லின் மணி போல்
நெஞ்சில் வளர்ந்த நினைவுகளே...
கள்ளமறியா கண்ணில் சுமந்த கனவுகளே...
ஓ... தென்றலே நீ ஓடி வா
வான் மேகமே பூ தூவ வா
நீ வரும் நாள் நாளை வாழ்த்தி பாடவா