Elige una pista para reproducir
Sencillo / Pista
யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே
ஏனோ விழிகளிலே
பௌர்ணமி தழும்பியதே
யாரது அங்கே காதல் தேவனா
தேடியதாரோ எனது ஜீவனா
இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்
இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்
யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே
மௌனம் ஒரு காதல்
இசை ஒரு காதல் தான்
கேட்கும் ஒளி எல்லாம்
அன்பே உந்தன் பெயர் தான்
வானவில் மீதிலே வண்ணங்கள் ஏழும் காதலே
காதலை நீங்கினால் குயில்கள் கூட ஊமையே
பூத்திருந்தேன் என்னை நீ வந்து சூட
பார்த்திருந்தேன் உன்னை கண்களில் மூட
நான் என்பதும் நீ என்பதும் தொலைந்து போக
யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே
புல்வெளியில் மலராய்
காதலில் விழுந்தேன்
சிந்தும் பனி துளியில்
மெல்ல மெல்ல நனைந்தேன்
காதலின் கண்களில் தொலைந்து நானும் போகிறேன்
காதலின் கைகளில் கரைந்து நானும் போகிறேன்
தேடி நின்றேன் என்னை உன்னிடம் தேட
ஓடி வந்தேன் மலை ஆறுகள் போல
நீ என்பதில் நான் என்பது கரைந்து போக
யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே
யாரது அங்கே காதல் தேவனா
தேடியதாரோ எனது ஜீவனா
இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்
இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்