Elige una pista para reproducir
உலகினில் உள்ள உயிர்களிடம்
தனிச்சிறப்பு ஒன்றிருக்கும் பார்த்துக்கொள்
அதன் தன்மையை தேடி அறிந்துக்கொள்
நல்ல குணங்களை நீயும் கற்றுக்கொள்.
தோகை விரித்தாடும் மயிலை பார்
அந்த மயிலிடம் நீ நடனம் கற்றுக்கொள்
கீதமாய் கூவும் குயிலை பார்
அந்த குயிலிடம் நீ பாட கற்றுக்கொள்
வாலை ஆட்டி வரும் அந்த நாயை பார்
அந்த நாயிடம் நீ நன்றியை கற்றுக்கொள்
துள்ளி குதித்து ஆடும் மீன்களை பார்
அந்த மீனை போல் நீந்த கற்றுக்கொள்
சுறுசுறுப்பாக ஓடும் எறும்பை பார்
அந்த எறும்பிடம் உழைப்பை நீயும் கற்றுக்கொள்
கும்பலாக சுற்றும் காகம் பார்
பகிர்துன்ன காகத்திடம் நீயும் கற்றுக்கொள்
தாயிடம் அன்பை கற்றுக்கொள்
தந்தையிடம் அறிவை கற்றுக்கொள்
குருவிடம் அனைத்தையும் கற்றுக்கொள்
குறைவில்லாமல் நீயும் கற்றுக்கொள்