Elige una pista para reproducir
அப்பா விரல் அப்பா விரல் நீ எங்கே
இங்கே தான் நான் இருக்கேன் நீ எப்படி இருக்கே
அப்பா விரலே அப்பா விரலே
உன் பெயர் என்ன?
நான் நீரில் வாழும் பெரிய மிருகம்
என் பேர் நீர்யானை
அம்மா விரல் அம்மா விரல் நீ எங்கே
இங்கேதான் நான் இருக்கேன் நீ எப்படி இருக்கே
பலமாய் இருக்கும் என் நீர்யானை அம்மா
உன் உணவென்ன?
பழங்களையும் புற்களையும்
நான் நிறைய நிறைய சாப்பிடுவேன்
அண்ணா விரல் அண்ணா விரல் நீ எங்கே
இங்கே தான் நான் இருக்கேன் நீ எப்படி இருக்கே
நீர்யானை அண்ணா
நீ எப்போ கடிப்ப?
எனக்கு கோபம் வந்தா கடிப்பேன்
ரொம்ப கடிச்சிடுவேன்
அக்கா விரல் அக்கா விரல் நீ எங்கே
இங்கே தான் நான் இருக்கேன் நீ எப்படி இருக்கே
நீர்யானை அக்கா
நீ எங்கே தூங்குவ?
நான் தண்ணீர் மற்றும் தரைமேல் தூங்கி
குறட்டை விடுவேன்
பாப்பா விரலே குட்டி விரலே நீ எங்கே
இங்கேதான் நான் இருக்கேன் நீ எப்படி இருக்கே
நீர்யானை பாப்பா
நீ எவ்வளோ பெரிசு?
குண்டு குண்டா கொழுகொழுன்னு
நான் வளர்ந்துட்டு இருப்பேனே