Elige una pista para reproducir
Sencillo / Pista
மத்தாள பாற மேல கோரனாரு
மாதங்கமா நின்னாரு கோரனாரு
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு
எக்காலம் தட்டினாறு கோரனாரு
கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையாபோட்டு
காவகாத்து நின்னாரு
மத்தாள பாற மேல கோரனாரு
மாதங்கமா நின்னாரு கோரனாரு
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு
எக்காலம் தட்டினாறு கோரனாரு
கோட்டை கோபுரம் தந்தாலும்
கோடி சுகத்த தந்தாலும்
சேனை காக்கும் வீர கோரன்
உன்ன போல வேறாரு
கூட்ட கலைக்கும் கூட்டங்கள்
சூழ்ச்சி செய்துதான் வந்தாலும்
ஆழி பேரலையா போலெழுந்து
ஆடும் தாண்டவ கோன் யாரு
கோரனாரு எங்கள் கோரனாரு
மத்தாள பாற மேல கோரனாரு
மாதங்கமா நின்னாரு கோரனாரு
கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையாபோட்டு
காவகாத்து நின்னாரு
மத்தாள பாற மேல கோரனாரு
மாதங்கமா நின்னாரு கோரனாரு
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு
எக்காலம் தட்டினாறு கோரனாரு