Sencillo / Pista
ஏய் இங்க நா தான் கிங்கு
நா வெச்சதுதான் ரூல்ஸ்சு
அந்த ரூல்ஸ்ச இஸ்டத்துக்கு
அப்போ அப்போ மாத்திடே இருப்பேன்
அத கப்சிப்புனு கேட்டுட்டு ஃபாலோ பண்ணனும்
அத விட்டிட்டு எதாவது
அடாவடிதானோ பண்ணனும்னு நெனச்ச
உன்ன கண்டதுண்டாம வெட்டி
கலச்சி போட்டுடுவேன்
ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்
ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்
அலப்பறை கிளப்புறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா(ஏய்)
காட்டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா(ஏய்)
வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்(ஏய்)
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்(ஏய்)
நடக்குற நடை புயலா ஜே (ஏய்)
முடி ஒதுக்குற ஸ்டைலா ஜே
கனவில்லை இது ரியலா ஜே(ஏய்)
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை
வரும் தலைமுறை வெயிலா ஜே(ஏய்)
அட நூறுக்கு டயலா ஜே
செதுக்குற இடம் ஜெயிலா ஜே(ஏய்)
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை
ஒன் அலும்ப பார்த்தவன்(ஏய்)
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்(ஏய்)
ஆட்டம் போட வைப்பவன் இவன்
பேர தூக்க நாலும் பேரு(ஏய்)
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா (ஹுக்கும்)
உசிரு கொடுக்க கோடி பேரு(ஹே ஹே )
கோ கோ கோ கோடி பேரு(ஹே ஹே )
ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
நீ எண்டு கார்டு வச்சா(ஏய்)
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா(ஏய்)
இவன் மலையில் ஏறி நிப்பான்
சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா(ஏய்)
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா (ஏய்)
உச்சந்தலையில இடிதான்
நரைசிருச்சுன்னு முறைக்காதே(ஏய்)
துரைகிட்ட வந்து கொரைக்காதே
சிறையில் சிக்கி தொலைக்காதே (ஏய்)
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல
தொட நெருங்கிட முடியாதே(ஏய்)
எது இழுக்கிது தெரியாதே
குள்ள நரிக்குது புரியாதே (ஏய்)
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற
ஒன் அலும்ப பார்த்தவன்(ஏய்)
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்(ஏய்)
ஆட்டம் போட வைப்பவன் இவன்
பேர தூக்க நாலும் பேரு(ஏய்)
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா(ஹுக்கும்)
உசிரு கொடுக்க கோடி பேரு
அலப்பறை கிளப்புறோம்(ஏய்)
தலைவரு நிரந்தரம்
டேய் தம்பி
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்
அர்த்தமாயிந்த ராஜா