Elige una pista para reproducir
Sencillo / Pista
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
நீ பேரழகில் போர் நடத்தி
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே
கடத்திச் சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு
அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள்
நீயே தந்தாய்
என் உலகம் தனிமைக் காடு
நீ வந்தாய் பூக்களோடு
என்னைத் தொடரும் கனவுகளோடு
பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே
மழை ஆவேன்
உன் அன்பில்
கண்ணீர்த் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
உன் கருங்கூந்தல் குழலாகதான்
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான்
ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் (ஆஆ)
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த (ஆஆ)
வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றைத் தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
ஹம்ம்...ஹம்ம்...ஹம்ம்...ஹம்ம் (ஆஆ...ஆஆ)