நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே
ஒரு முறைதான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை(இல்லை)
மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை
கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீதான் தாங்கினாய்
ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்
உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே
ஒரு முறைதான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே பனியாய் கரைந்துவிட்டேன்
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை