Elige una pista para reproducir
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும்
மனிதா சஞ்சலம் ஏதுமில்லை
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும்
மனிதா சஞ்சலம் ஏதுமில்லை
தாய் போன்ற தெய்வமுமில்லை
தாய் இன்றி ஜீவனுமில்லை
தாயின் அன்பு கடனைத் திருப்பி
தந்தவர் யாருமில்லை
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும்
மனிதா சஞ்சலம் ஏதுமில்லை
தூங்கும் வேளையில்
பிள்ளை இருமினால்
துள்ளி எழுந்ததென்னம்மா
ஆதி பகலும்தான்
அளுது புலம்பினேன் இருக்கின்றாள்
சும்மா எங்கு சென்ற போதும்
என்னை துணையாக அழைப்பாயே
சொர்க்க வாசல் போகும் போது
தனியாகச் சென்றாயே
தலையாட்டும் விதியின் கையில்
விளையாட்டு பொம்மை ஆனேன்
தாயின் யாபக அலைகள் வீசும்
தனிமைத் தீவானேன்
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும்
மனிதா சஞ்சலம் ஏதுமில்லை
வெள்ளி நிலவுதான்
தொலைவில் இருப்பினும்
வெளிச்சம் பூமியில் வீசும்
உலக உறவுதான்
அறுந்த போதிலும்
தொடரும் தாய்ப் பாசம்
ஆவியாகும் தண்ணீர் மீண்டும்
மழையாய் பூமியைத் தீண்டும்
சோர்ந்த நேரம் மகனின்
கனவில் துணையாய்
தாய் முகம் தோன்றும்
ஊராரை ஊட்டி வளர்த்தேன்
ஊரே உன் உறவாய் மாறும்
உன்னைத் தேடும்
அன்னை வடிவில்
என்னை நீ காண்பாய்
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும்
மகனே சஞ்சலம் ஏதுமில்லை
தாய் போன்ற தெய்வமுமில்லை
தாய் இன்றி ஜீவனுமில்லை
தாயின் அன்பு கடனைத் திருப்பி
தந்தவர் யாருமில்லை
தாயின் அன்பு கடனைத்
திருப்பி தந்தவர் யாருமில்லை
தாயின் அன்பு கடனைத்
திருப்பி தந்தவர் யாருமில்லை