Elige una pista para reproducir
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பேஞ்சா
மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து
போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
நதியென்றால் அங்கே
கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க
மரமே காவல்
புள்ளி போட்ட
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி
புளியம்பூ சேலைக்காரி
நெல்லறுத்து போகையில்
யார் கன்னி எந்தன் காவலடி
அன்னக்கிளி உன்ன தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி உன்ன தேடுதே
அன்னக்கிளி உன்ன தேடுதே