தீவினை ஆறாதா?
தீயவை மாறாதா?
தீ ரணம் தீராதா?
தீயின் தேடல் சேராதா?
வினைகளை வினை அறுக்குதே
விடைகளை விழி மறுக்குதே
விடியலை விதி சறுக்குதே
ஏதோ ஏதோ ஏதோ
இருதுருவம் ரெண்டுமே ஒன்று சேருமா?
இரண்டில் ஒன்று தோற்றுதான் சாயும்?
இருதுருவம் சேர்வது இயற்கை ஆகுமா?
இறுதியில் நன்மை தான் பிறக்குமா?
காயம் கோரம் ஆகலாம்
கோபம் தீமை புறியலாம்
காலம் கேடாய் போகலாம்
பாவம் மீண்டும் திரும்பலாம்
நேற்று செய்ததே - நாளை உன்னையே
சேரும் சேருமே
மேலும் கீழுமாய்
வாழ்க்கை சுழலுமே
போராடு நீ
இருதுருவம் ரெண்டுமே ஒன்று சேருமா?
இரண்டில் ஒன்று தோற்றுதான் சாயும்?
இருதுருவம் சேர்வது இயற்கை ஆகுமா?
இறுதியில் நன்மை தான் பிறக்குமா?