Elige una pista para reproducir
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான்
உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும்
தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும்
தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
மழைக்காத்து வீசுறபோது
மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது
வண்ண மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது
மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது
வண்ண மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு
என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னதான் கட்டி வைப்பேன்
சுகமான தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு
சரி ஜோடி நாமாச்சு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான்
உங்க குழலோசைப் போட்டி போடுதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை
என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை
என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான்
போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான்
ராவானா தேடுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம்
படும் பாடு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான்
உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும்
தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும்
தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ