ரயிலா ரயிலா ஓடும் ரயிலா
மனசையும் கடத்துறியே
கயிறா கயிறா nylon கயிறா
வயசையும் இழுக்கிறியே
கண்ணால காவடியா(அம்மாடி)
என்னையும் நீ தூக்குறியே(ஐயோடி)
உன்னால என் நாடியில
எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி
ஆகாய ஊஞ்சல், போலே உன் பார்வை
அழகாக ஆள தூக்கி மேல வீசுதே
ஒளி ஏத்தும் பேச்சுல
உசுரோரம் பேய் மழை
கொட சாஞ்சு நானும் போக
கோலம் போடுதே
காணாத சாமிகள(நான்தான்)
பார்த்தேன் உன் சாயலில(ஆமா)
உன் கை விரல் மோதயில
குயில் கூவுது மூலையில
பாஞ்சாலி சேலை
போலே என் காதல்
உன்ன சேர ஏங்கி ஏங்கி நீளமாகுதே
ஒழுங்காக கோட்டுல
நடை போட்ட காலுமே
உன்ன பார்க்கும் ஆசையால
ஆட்டம் போடுதே
காதோரம் செய்திகள(ஆஹா)
நீ பேசும் வேலையில(ஓஹோ)
கண் தூங்கவும் கூடலையே
நிதம் கூட்டுற காதலையே
ரயிலா ரயிலா ஓடும் ரயிலா
மனசையும் கடத்துறியே
கயிறா கயிறா nylon கயிறா
வயசையும் இழுக்கிறியே
கண்ணால காவடியா(காவடியா)
என்னையும் நீ தூக்குறியே(தூக்குறியே)
உன்னால என் நாடியில
எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி
ஹேய் திண்ணக்கு தின்னா
தக்கு திண்ணக்கு தின்னா
ஹேய் திண்ணக்கு தின்னா
தக்கு திண்ணக்கு தின்னா ஹேய்