Elige una pista para reproducir
ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ
ஆரி ஆராரிரோ
கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை
கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை
ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ
ஊமைக்கு சொந்தம் யார் யாரோ
பூ வைத்த நெஞ்சில் தீ வைத்ததாரோ
உண்மையை சொல்ல வாராரோ
ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ
ஊமைக்கு சொந்தம் யார் யாரோ
பூ வைத்த நெஞ்சில் தீ வைத்ததாரோ
உண்மையை சொல்ல வாராரோ
காளைக்குத்தானே வீராப்பு
கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு
கன்றோடு பசு இன்று திண்டாடுது
கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை
சிப்பிக்குள் முத்து வந்தாலும் அது
சிப்பிக்கு சொந்தம் ஆகாது
நதியோடு போனால் கரை உண்டு கண்ணே
விதியோடு போனால் கரை ஏது
சிப்பிக்குள் முத்து வந்தாலும் அது
சிப்பிக்கு சொந்தம் ஆகாது
நதியோடு போனால் கரை உண்டு கண்ணே
விதியோடு போனால் கரை ஏது
கண்ணுக்குள் வெல்லம் இப்போது
நான் கரை சேரும் காலம் எப்போது
உன் தாய்ப்பாலில் கண்ணீரை யார் சேர்த்தது
கட்டிக் கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை
ஆரிரராரோ ஆராரோ ஆரிரராரோ ஆராரோ
ஆரிரராரோ ஆராரோ