Elige una pista para reproducir
Sencillo / Pista
ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா
ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா
நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா
ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா
ஹே சீதா
இந்த திரிக்கி தீயை தா
ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஏலேலே ஏலேலே சிம்ஹரே சிம்ஹரே
கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில் மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா
ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா
என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்
என் உலகம் என்னாகும்
இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்
விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூக்குரல் கேட்குமா
வலிகள் ஓவியம் ஆகுமா
உனை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா
ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா