Elige una pista para reproducir
Sencillo / Pista
அஹ்ஹ் அஹ்ஹ் அஹ்ஹ்
தூவானம் தூவத் தூவ
மழைத் துளிகளில்
உன்னைக் கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை
நானே கண்டேன்
கடவுள் வரங்கள்
தரும் பல கதைக் கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்குப் பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்
தூவானம் தூவத் தூவ
மழைத் துளிகளில்
உன்னைக் கண்டேன்
குயிலென மனம் கூவும்
மயிலெனத் தரைத் தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்
புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து
நீ செல்லும் சாலையில்
யார் தீங்கு செய்தாலும்
மன்னிக்கத் தோன்றும்
நீ தந்த இம்மாற்றம்
என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால்
கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாகப் போகின்றதே
தூவானம் தூவத் தூவ
மழைத் துளிகளில்
உன்னைக் கண்டேன்
சா சா சா ரரரர சா ரரரர
சா ரரரர சா ரரரர
இரவுகள் துணை நாடும்
கனவுகள் கடைப் போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்(அஹ்ஹ் )
விரல்களில் விரல் கோர்க்க
உதட்டினை உவர்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்(அஹ்ஹ் )
நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரிங்காரம்தான் செய்து
கொல்கின்ற ஆணை
நீ தான் கைத் தூக்க
வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு
கண் மூடுவேன்
தூவானம் தூவத் தூவ
மழைத் துளிகளில்
உன்னைக் கண்டேன்(அஹ்ஹ் )
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானேக் கண்டேன்(அஹ்ஹ் )
கடவுள் வரங்கள்
தரும் பல கதைக் கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்குப் பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்