Elige una pista para reproducir
போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு
பறவை ரெண்டும்
வேறுதான் சிறகின் இறகும்
வேறுதான் என்றாலும் பாதை
ஒன்று அறிவேன் எந்நாளும்
உந்தன் அன்பை மறவேன்
போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு
அலங்கோலமாக இருந்தேனே நேற்று
அழகான மாற்றம் நீயும் வந்தாய்
தகராறு நானும் வரலாறு போல
உருமாற நீயே வேகம் தந்தாய்
தவறு புரிந்த எனையுமே
தழுவ துணிந்த இதயமே
கண்ணீரில் உந்தன்
காலும் கழுவனும்
என்னாதோ நெஞ்சம்
நீயும் உதவனும்
போய் வரவா
போய் வரவா (ம்ம்ம் ம்ம்ம் )
விழுந்தாலும் நானே விதையாக வேண்டும்
வருங்காலன் பேச வாழ்வை வெல்வோம்
அவமானம் தோல்வி உரமாக
மாற அடையாளம் மீட்க
கோபம் கொள்வோம்
ஏது உன் வாழ்வில் பாடலே
எதற்கு இன்னும் சோகமே
எழுந்தால் எட்டு திசையும் உறுதி
மனம் முயன்றால் விட்டு விலகும் அவதி
போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு
பறவை ரெண்டும் வேறுதான்
சிறகின் இறகும் வேறுதான்
என்றாலும் பாதை
ஒன்று அறிவேன்
எந்நாளும் உந்தன் அன்பை மறவேன்