Elige una pista para reproducir
Sencillo / Pista
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையை தேடுதாம்
என்றும் இவனும் குழந்தையா
வார்த்தை இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம் பொங்குமே
கருணை சிந்துதே
காற்று மலையில் மோதலாம்
அந்த கடலில் சேரலாம்
இந்த குழந்தைக் கூட்டத்தில்
இவனும் தென்றலே
மன்னாதி மன்னா
வீராதி வீரா
எங்கள் நண்பா பாண்டி
விளையாடும் சிங்கம்
விலையில்லா தங்கம்
எங்கள் நண்பா
பவர் பாண்டி
புதிய வானம் பறந்துப் பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்
வாழ்க்கையே என்றுமே
எதையோ தேடும் பயணம்
இறுதியில் அடைக்கலம்
பேரன் பேத்தி ஜனனம்
தேடினோம் ஓடினோம்
எத்தனை கனவு
ஓய்ந்து போய் சாய்வது
குழந்தை இருக்கும் கூடு
இதுதான் சுகமா
கடவுளின் வரமா
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா
தாயும் இல்லை
தாரமும் இல்லை
மகனின் மகளே நீ ஓடி வா
தோளில் ஒன்று
மடியில் ஒன்று
உணர்ந்தால் மட்டும் புரியும்
உயிர் மட்டும் இது போதும்
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையை தேடுதாம்
என்றும் இவனும் குழந்தையா
வார்த்தை இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம் பொங்குமே
கருணை சிந்துதே
காற்று மலையில் மோதலாம்
அந்த கடலில் சேரலாம்
இந்த குழந்தைக் கூட்டத்தில்
இவனும் தென்றலே
மன்னாதி மன்னா
வீராதி வீரா
எங்கள் நண்பா பாண்டி
விளையாடும் சிங்கம்
விலையில்லா தங்கம்
எங்கள் நண்பா
பவர் பாண்டி
புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்