சுத்திப்போட வேணாமா
கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு
ஊருக்குள்ள பேச்சு
வயலுக்குள் போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக
நம்ம பேரை நடவு செய்யுதய்யா
சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம
நம்ம சேதி வாங்கி போகுதையா
அட ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல
நம்ம கதைய பேசிதான்
காத்தே வீசுது
சுத்திப்போட வேணாமா
கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு
ஊருக்குள்ள பேச்சு
மகளா மருமகளா
என் வீட்டுக்கு வருவ
விளக்கா குத்து விளக்கா
நீ வெளிச்சம் வீசுவ
புருஷன் தோளில
நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள
நான் புண்ணியம் சேமிப்பேன்
அழகா என்ன அதட்டி
நீ கட்டளை போடுவ
குளிச்சா தலை துவட்டி
நீ முத்தமும் வாங்குவ
தெனமும் தெனமும் நான்தான்
வந்து வெத்தல மடிக்கணும்
பாதி கடிச்சி நீதான்
மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அட இப்படி ஒரு ஜோடியானு
உலகமும் கண்ணு வைக்கணும்
சுத்திப்போட வேணாமா
கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு
ஊருக்குள்ள பேச்சு
தநநந தானனான தநநந தானனான
ஏலேலோ ஏலேலேலோ ஏலேலோ ஏலேலேலோ
தநநந தானனான தநநந தானனான
அடியே இளம் கொடியே
உன் மடியில் இடம் கொடு
முடிஞ்சா உன் மார்பில்
கொஞ்சம் முனங்க வழி கொடு
ஆ இரவு நேரம் வந்தா
உன் மெத்தையில் இடம் கொடு
விடியும் நேரம் ஆனா
என் சேலைய நீ கொடு
கனியே மச்ச கனியே
உன் கன்னத்தின் ருசி கொடு
கடைஞ்ச வெள்ளி சிலையே
உன் கழுத்தில் மனம் கொடு
உதட்டில் கொடுத்த முத்தம்
அத திருப்பி தான் கொடு
வெட்கமும் எனக்கு வந்தா
நீ இரண்டுதான் கொடு
எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்னா பெத்து கொடு
சுத்திப்போட வேணாமா
கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு
ஊருக்குள்ள பேச்சு
வயலுக்குள் போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக
நம்ம பேரை நடவு செய்யுதய்யா
சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம
நம்ம சேதி வாங்கி போகுதையா
அந்த ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல
நம்ம கதைய பேசிதான்
காத்தே வீசுது
சுத்திப்போட வேணாமா
கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு
ஊருக்குள்ள பேச்சு