Elige una pista para reproducir
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியம் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அதுவே தன் விதியென்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்(மனிதன் மாறிவிட்டான்)
மதத்தில் ஏறிவிட்டான்
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான்
மதம் தனை படைத்தான்
எதனை கண்டான் மதம் தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
இன்பம் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
மனிதன் மாறிவிட்டான்
ஓ ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓ ஓஹோ ஓஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்(மனிதன் மாறிவிட்டான்)
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்(மனிதன் மாறிவிட்டான்)
ஓ ஒ ஓஹோ ஓ ஹோய்
ஓ ஒ ஓஹோ ஓ மனிதன் மாறிவிட்டான்