Elige una pista para reproducir
நம்ம ஊரு தோட்டத்திலே
ரோசாப்பூ பூத்திருக்கு தமிழனுக்கு
தங்க தமிழனுக்கு
பச்சை தமிழனுக்கு
மாலகட்டி போடப் போறோம்
வாழ்த்துசொல்லி பாடப்போறோம் தலைவனுக்கு
எங்க தலைவனுக்கு
தங்க தலைவனுக்கு
அழகு மகாராசன் தான்
அசந்து நிக்கும் தேசம் தான்
ஜனங்க வணங்கும் மன்னன் தான்
சகலருக்கும் அண்ணன் தான்
மத்தளம் தாளம் தட்டிடனும்
நம்ம தலைவனுக்கு
நித்தமும் ஆளம் சுத்திடனும்(ம்ம்)
முத்துப்போல் பாட்டு கட்டிடனும்
நம்ம தமிழனுக்கு
மொத்தமா வாழ்த்து சொல்லிடனும்(ம்)
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வேர்வை வடிச்சு உழைக்கிற இனம் தான்
எனக்கு உறவாகும் எங்கும்
நேர்மை வழியில் நடக்கிற மனம் தான்
எனக்கு உயிராகும்
ஏழை சனங்க கொடுக்கிற வாழ்த்த
நாளும் மதிப்பேனே இங்கே
கூழை குடிக்கும் குடும்பங்கள் சிரிச்சா
நானும் சிரிப்பேனே
நல்லவன் எப்போதும் பிழைக்கனும்
நன்மைகள் எப்போதும் தழைக்கனும்
நினைச்சதெல்லாம் கைகளிலே கிடைக்கனும்
தொட்டது எப்போதும் துலங்கனும்
தர்ம சத்தியம் விளங்கனும்
விதச்சதெல்லாம் பூமரமா மொளைக்கெனும்
துணிந்து நின்றால் தடை ஏது
தோல்வி நமக்கு கிடையாது
நம்ம ஊரு தோட்டத்திலே
ரோசாப்பூ பூத்திருக்கு தமிழனுக்கு
தங்க தமிழனுக்கு
பச்சை தமிழனுக்கு ஹோய்
கால்கள் இழந்த முடவருக்கெல்லாம்
கால்கள் நாமாவோம் ரெண்டு
கைகள் இழந்து தவிப்பவற்கெல்லாம்
கைகள் நாமாவோம்
வார்த்தை இழந்த ஊமையற்கெல்லாம்
வார்த்தை நாமாவோம் இங்கே
பார்வை இழந்த குருடருக்கெல்லாம்
பார்வை நாமாவோம்
கைவண்டி இழுக்கும் கிழவனும்
கலப்பை பிடிக்கும் உழவனும்
கவலையின்றி வாழும்படி செய்யனும்
கட்சியும் பிட்சியும் எதுக்குடா
கிட்டவராமே ஒதுக்குடா
மனித ஜாதி ஒன்னாகத்தான் சேரனும்
நீதி ஞாயம் பண்பாடு
நாலும் வாழ பண்பாடு
நம்ம ஊரு தோட்டத்திலே
ரோசாப்பூ பூத்திருக்கு தமிழனுக்கு
தங்க தமிழனுக்கு
பச்சை தமிழனுக்கு
அழகு மகாராசன்தான்
அசந்து நிக்கும் தேசம் தான்
ஜனங்க வணங்கும் மன்னன் தான்
சகலருக்கும் அண்ணன் தான்
மத்தளம் தாளம் தட்டிடனும்
நம்ம தலைவனுக்கு
நித்தமும் ஆளம் சுத்திடனும்(ம்ம்) ஹோய்
முத்துப்போல் பாட்டு கட்டிடனும்
நம்ம தமிழனுக்கு
மொத்தமா வாழ்த்து சொல்லிடனும்