Elige una pista para reproducir
மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா
உடுக்கை பம்பை முரசொலிக்க
உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா
மேல் மலையனூரில் கோயில் கொண்ட
என் அங்காள ஈஸ்வரியே
ஆத்தாளே அழைக்கின்றேன்
ஆடி இங்கு வந்திடம்மா
நீ வந்திடம்மா
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே(அம்மா)
மாங்காளி திரிசூலியே(தாயே )
குறி சொல்ல வந்திடம்மா(அம்மா)
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா(ஆமாம்மா)
மலையனூரு அங்காளியே(அம்மா)
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
தேரோடும் வீதியிலே
தாயே நீயாடி வந்திடம்மா
அந்தரியே சுந்தரியே(ஆமாம்மா)
எங்க அங்காள ஈஸ்வரியே(நீதாம்மா)
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே(அம்மா)
நீ அழகாக வருபளே அம்மம்மா
மலையனூரு அங்காளியே(அம்மா)
மாக்காளி திரி சூலியே(தாயே )
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா(ஓடிவாம்மா)
மலையனூரு அங்காளியே
மாகாளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா(ஓடோடிவாம்மா)
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே(அம்மா)
ஆலய வாசலிலே
அலங்காரத் தோரணமாம்
அங்காள ஈஸ்வரிக்கு
அபிஷேக பூஜைகளாம்
ஆடிவரும் தேரினிலே
அம்மா நீ அசைந்து வரும் கோலம்மம்மா
ஆயிரம் கண்கள் கொண்டவளே
எங்க அங்காள ஈஸ்வரியே
திருவிளக்கின் ஒளியினிலே(ஆமாம்மா)
தாயே திருவாக்கு சொல்லிடம்மா(ஆமா)
திருவிளக்கின் ஒளியினிலே(அம்மா)
தாயே திருவாக்கு சொல்லிடம்மா(ஆமாம்மா)
மாவிளக்கின் ஒளியினிலே
தாயே நல்ல குறி சொல்லிடம்மா(சொல்லம்மா)
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மலையனூரு அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா(ஓடிவாம்மா)
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வாடியம்மா (அம்மா)
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா(தாயே)
மலையனூரு அங்காளியே(அம்மா)
மாங்காளி திரிசூலியே(தாயே)
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்(அம்மம்மா)
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே(தாயே தாயே)
மாக்காளி திரிசூலியே(ஓடிவாம்மா ஓடிவாம்மா)
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே(ஓடிவாம்மா தாயே அம்மா)