Sencillo / Pista
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தும் தானனா தும் தானனா
தும் தனனா நானானா
தும் தானனா தும் தானனா
தும் தனனா நானானா
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும்
தேவை இந்த யுத்தம்
போதும் போதும் என பொருத்தாலும்
தீரும் தீரும் என தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் பொங்கும் யுத்தம்
பல்லாண்டு காலம் மண்ணில்
தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன் நெஞ்சில்
சாயாது வன்மம்
வேற வழியே இல்ல
பூஜை ஒன்று போடப் போறானே
ஒரு துணையே வேணாம்
தன்னந்த் தனியா மோதப் போறானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப்பாயும் நேரம்
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும்
தேவை இந்த யுத்தம்
தேடி தேடி கால்கள்
எங்கோ போகுதே
மனம் வாடி வாடி கொஞ்சம்
ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே ஆடும்
கண்ணா மூச்சி தான்
அட மாட்டிக்கிச்சு இங்கே
பட்டாம் பூச்சி தான்
தனியாக ஒரு மானை தேடியே
நீ ஓடும் ஒர ஓட்டம்
தடம் மாறும் உன் எண்ணம் எங்கிலும்
ஏனோ ஒரு வாட்டம்
கண்ணீரை நீயும் சிந்த கூடாது
கண்டாலே போதும் தூக்கம் தொடராது
வாழவெச்ச தெய்வம்
விட்டு போனதே
அதை அறியாதிந்த நெஞ்சம்
விக்கி போகுதே
அட ஆலமரம் ஒன்னு
சாஞ்சு கெடக்கே
அதை யாரு வந்து சொல்ல
சாபம் இருக்கே
கலங்காதே இது கடவுள்
சோதனை காணாமல் போகும்
பதறாதே நீ மீண்டு வந்ததும்
பத்து தலைமுறை பேசும்
வாடாதே பூமி
விடியாததா
போடா போ உன்னால்
முடியாததா ஆ
வேற வழியே இல்ல
பூஜை ஒன்று போடப் போறானே
ஒரு துணையே வேணாம்
தன்னந்த் தனியா மோதப் போறானே
ஓராயிரம் ஈட்டியாய்
சீறிப்பாயும் நேரம்
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும்
தேவை இந்த யுத்தம்
போதும் போதும் என
பொருத்தாலும்
தீரும் தீரும் என
தடுத்தாலும்
தாகம் கொண்டுதான்
தேகம் எங்கும்
கோபம் பொங்கும் யுத்தம்