Elige una pista para reproducir
Sencillo / Pista
ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம்
சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை
இதே கதை
இதம் இதம்
இதே தினம்
இதே க்ஷணம்
இதம் பதம் சரம்
ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம்
சுகம் சுகம்
ம்ம் ம்ம் ம்ம்
பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முதலாய் இருந்தேன்
பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்
ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்
மலரே உந்தன் மலா்கள் தோறும்
மஞ்சம் அமைப்பேன்
கனியாய் மாறும் ரசவாகங்கள்
கற்றுக்கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம்
வாரிக்கொடுப்பேன்
அதை ரசித்தேன்
ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம்
சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை
இதே கதை
இதம் இதம்
திரனதீம்தனன திரனதீம்தனன திரனதீம்தனன தினன
நகர்த்தோம்தன தோம்தன தோம்தன
நகர்த்தோம்தன நகர்த்தோம்தன
நகர்தனி நகர்தனி நகர்தனி தோம் தோம் தோம்
மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீ வரலாமே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு
தேடி தேடி செல்கள் எல்லாம்
தேனை நிரப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது
உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு
ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம்
சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை
இதே கதை
இதம் இதம்
இதே தினம்
இதே க்ஷணம்
இதம்
பதம்
சரம்