Elige una pista para reproducir
Sencillo / Pista
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஹா
ஆஆ ஆஆ
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மலைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்
புல்லோடு இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே
தூங்காது நமது தீபமே
கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே
முடியாது அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே
முடியாது நமது பந்தமே
மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து இசை பாடுமா
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வது அறியேன்
இனி என்ன ஹ்ம்ம்
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ