Elige una pista para reproducir
Sencillo / Pista
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின்
செல்ல கோபம்
ஆள் இல்லா நல் இரவில்
கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
மக சரி காரி காரி சரி ரீச ரீச நித நீதப்பாம கமணிப
மக சரி காரி காரி சரி ரீச ரீச நித நீதப்பாம கமணிப பனிசனி
தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய் பிறை போல்
வரும் நக கணுக்கள்
வகுப்பறை மேசையில்
இடும் கிறுக்கல்
செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில்
எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம் ஆஅ
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்
விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின்
செல்ல கோபம்
ஆள் இல்லா நல் இரவில்
கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே ஆஅ
பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்