Elige una pista para reproducir
தீ மின்னல் அடிக்க
சூறாவளியும் வெடிக்க
ஊரைக்காக்க வீரன் இங்கு
அவதாரத்தை எடுக்க
காற்றாய் எங்கும் பரந்தே
காக்கிச் சட்டை நடுங்க
கூட்டமிங்கு வாய் பிளக்க
டிஷ் டிஷ்
அழகான கானகத்தில் முன்னொரு நாளில்
வேட்டைக்காரன் வந்திட
அச்சத்தோடு உயிரை காக்க
ஒளிந்து கொண்டன விலங்குகள்
வந்தானொரு மாயாவியே
டிஷ்யூம் டிஷ்யூம் சண்டையே
அந்த வேட்டைக்காரன் அடங்கிப் போனான்
பயத்தில் ஒடுங்கியே
திக்கெட்டும் குலுங்க நடுங்க
சிறகோடங்கு வட்டம் போட்டான்
மகிழ்ந்தே மிளிர்க்கும் மின்மினி பூச்சிகள்
உற்சாகம் பெருகி பெருகி
எலும்பொடித்தான் தாண்டவமாடி
காவலாகி காக்க வந்தான்
மின்னல் முரளியே