Sencillo / Pista
நீ காற்று
நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
தம் தம் தம் தம் தம் தம்
தம் தம் தம் ஆஆஅ
நீ அலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழவேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும்
நான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேரும் வரைக்கும்
நான் துடித்து இருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்துதான்
நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும்
நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும்
சார்ந்தே நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம்(ம்ம்ம்ம்ம்)
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்