Sencillo / Pista
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ
வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா
வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப்பூ
வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
வெள்ளிப்பனி மேகங்கள்
செல்லும் ஊர் கோலங்கள்
அவள் பாதத்தில் என்னைச் சேருங்கள்
அந்த மழை மேகங்கள்
எந்தன் எதிர்காலங்கள்
காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்
நெஞ்சில் அலை மோதும்
கடல் போலே ஓசை
வந்து கரையேறும்
அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கம் என்ன
சின்னத் தயக்கம் என்ன
இந்தக் காலங்கள் தவக்கோலங்கள்
ஹா ஹோ ஹோ
வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா
அஹ்ஹ்ஹ அஹ்ஹ் ஒஹ்ஹஹ் ஒஹ்ஹ லலலல லலல
ஒரு புல்லாங்குழல்
பாடும் தனி ராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா
அந்த சுரம் பாடினால்
தொட்டுச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் குளிர் காலமா
நித்தம் ஒரு கோடி
கனவோடு தூக்கம்
ஆஹா… புத்தம் புதுப் பார்வை
புரியாத ஏக்கம்
ரத்த நாளங்களில்
ஓடும் தாளங்களில்
ஒரு தாலாட்டுத்தான் பாடுமோ
வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ
வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா
வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா