ஒரு மட மாதும் ஒருவனுமாகி
உறவு கலந்து அன்புருவாகி
ஒழுகிய விந்து உருண்டு திரண்டு
குழவியுமாகி விழுந்தது மண்ணில்
வெளியே ஓடிப்போன மூச்சு
உடனே திரும்பலேன்னா போச்சு
வெளியே ஓடிப்போன மூச்சு
உடனே திரும்பலேன்னா போச்சு
காடு எரிந்தால் கரியும் ஆகும்
இந்த கூடு எரிந்தால் எதற்கு ஆகும்
வீடு வாசல் ஆயிரம் தேடு
விதி வரும் முன்னே இறைவனை நாடு
வீடு வாசல் ஆயிரம் தேடு
விதி வரும் முன்னே இறைவனை நாடு
வெளியே ஓடிப்போன மூச்சு
உடனே திரும்பலேன்னா போச்சு
வெளியே ஓடிப்போன மூச்சு
உடனே திரும்பலேன்னா போச்சு
ஆடி ஆடி ஆட்டமும் குறையும்
நாடி நரம்பு ஒடுங்கி போகும்
ஆடி ஆடி ஆட்டமும் குறையும்
நாடி நரம்பு ஒடுங்கி போகும்
கோடி கோடி பணத்தை தேடு
கொஞ்ச நேரம் ஈசனை நாடு
கோடி கோடி பணத்தை தேடு
கொஞ்ச நேரம் ஈசனை நாடு
கொஞ்ச நேரம் ஈசனை நாடு
கொஞ்ச நேரம் ஈசனை நாடு
கொஞ்ச நேரம் ஈசனை நாடு