Выберите трек для воспроизведения
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என்
இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில்
முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில்
நகத்தை கடித்தேன்
காதல் வந்தது
காதல் வந்தது காதல்
வந்ததடா அட காதல்
வந்தது காதல் வந்தது
காதல் வந்ததடா
ஐந்தாம் சந்திப்பில்
நான் ஐக்கியம் ஆனேனே
ஆறாம் சந்திப்பில் நான்
பைத்தியம் ஆனேனே
ஏழாம் சந்திப்பில் எட்டி
பிடித்தேன் எட்டாம்
சந்திப்பில் கட்டி
பிடித்தேன்
காதல் வந்தது
காதல் வந்தது காதல்
வந்ததடி அட காதல்
வந்தது காதல் வந்தது
காதல் வந்ததடி இன்னும்
கோடி கோடி ஆசை
நெஞ்சில் உள்ளே உள்ளதடி
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என்
இதயம் கொடுத்தேனே
அதிகாலை நேரத்திலே
கோலங்கள் நீயும் போட
தொலைவாக நான் நின்று
உன்னை சந்திப்பேன்
பால் வாங்கும் நேரத்தில்
பக்கத்தில் சந்திப்பேன்
நூறாண்டு வயதான
உள்ளூரு நூலகத்தில்
மறைவாக மறைவாக
தினம் சந்திப்போம்
பேருந்துக்குள்ளே தான்
பெரு மூச்சால் சந்திப்போம்
காலை நேரத்தில்
உன் கடிதம் சந்திப்பேன்
மாலை நேரத்தில் உன்
மடியில் சந்திப்பேன்
சாயங்காலம்
சாலை ஓரம் நீயும்
நானும் பிாியும் நேரம்
இருவரும் கூடி இமைகளை
மூடி இதழால் சந்திப்போம்
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என்
இதயம் கொடுத்தேனே
இ.பி.கோ. சட்டம் போட்டு
ஊர் அடங்க செய்தாலும்
ஓடோடி ஒரு நொடியில்
உன்னை சந்திப்பேன்
மண் வாசம் நீயானால்
மழையாக சந்திப்பேன்
இரு கையில் ஆணி வைத்து
சிலுவைக்குள் அறைந்தாலும்
உயிர் நீது உடன் வந்து
உன்னை சந்திப்பேன்
பூவாக நீ ஆனால்
காற்றாகி சந்திப்பேன்
போதிமரமாக
நீ மாறி போனாலும்
புத்தமதமாகி நான்
உன்னை சந்திப்பேன்
ஆயுள் உள்ள
காலம் வரை அன்பே
நாமும் கூடி வாழ
நம்மை பெற்ற அம்மா
அப்பா இருவரை
சந்திப்போம்
முதலாம் சந்திப்பில்
நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என்
இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில்
முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில்
நகத்தை கடித்தேன்
காதல் வந்தது
காதல் வந்தது காதல்
வந்ததடா அட காதல்
வந்தது காதல் வந்தது
காதல் வந்ததடா இன்னும்
கோடி கோடி ஆசை
நெஞ்சில் உள்ளே
உள்ளதடா