Выберите трек для воспроизведения
யம்மா-யம்மா காதல் பொண்ணம்மா
நீ என்னவிட்டு போனதென்னம்மா?
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
எம் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவள வச்சேனே
என் கண்ண இரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் முச்சுக்காத்த வாங்கிப் போனாளே
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டுத்தான் போயாச்சி
கண்ணு இரண்டுமே பொய்யாச்சி
காதல் என்பது வீண் பேச்சி
மனம் உன்னாலே புண்ணா போச்சி
காதல் பாத கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திர
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திர
யம்மா-யம்மா காதல் பொண்ணம்மா
நீ என்னவிட்டு போனதென்னம்மா?
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
எம் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் ஒன்ன பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேறு
நம்பி நொந்து போனேன் பாரு, அவ பூவு இல்ல நாரு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே-தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா?
காதல் இல்லா ஊரு எங்கடா?
என்ன கண்ண கட்டி கூட்டிப் போங்கடா
யம்மா-யம்மா காதல் பொண்ணம்மா
நீ என்னவிட்டு போனதென்னம்மா?
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
எம் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ள அவள வச்சேனே
என் கண்ண இரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் முச்சுக்காத்த வாங்கிப் போனாளே