Выберите трек для воспроизведения
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
படுக்க பாயும் இல்லை
கொடுக்க தாயும் இல்லை
படுக்க பாயும் இல்லை
கொடுக்க தாயும் இல்லை
இந்தப் புள்ள எல்லாருக்கும் சொந்தப் புள்ள
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
நடைபாதை உண்டு நாயும் படுக்க
அதுகூட இல்லை ஏழை இருக்க
கடலு தண்ணீ ஏராளமா இருக்குது
குடிக்க தண்ணீ எங்கே இங்கே கிடைக்குது
தலையெழுத்தென்ன தண்ணீரிலே அழிஞ்சிடுமா?
தனி இடத்திலே கண்ணீர் விட்டா விதி விடுமா?
அட அள்ளித்தர வள்ளல் இங்கே யாரிருக்கா?
ஹோய் பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்காத ஊரு எங்கே இருக்கு?
வழியுண்டா சொல்லு அங்கே பொறக்க
புள்ளை அம்மாகிட்ட பொறக்குது
பசியோ நம்மகிட்ட பொறக்குது
பசி எடுக்கையில் பத்தும் இங்கே பறக்குதம்மா
பழமொழியிலே சொன்ன சொல்லு புரியுதம்மா
அடக் காலம் செய்ஞ்ச கோலம் இது யாரச் சொல்ல
ஹோய் பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
உயிரென்ன சாமி போனா வருமா?
பொறி அள்ளிப்போட்டு வான்னா வருமா?
இருந்தா எந்தப்பய மதிக்கிறான்
போனா வாய்க்கரிசி கொடுக்கிறான்
சிலர் இடத்தில எல்லாம் உண்டு அனுபவிக்க
பலர் இடத்தில ஒன்னும் இல்லை பசி தவிர
அடச் சோறு இப்போ இங்கே வந்தா சொர்க்கம் வரும்
ஹேய் பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
படுக்க பாயும் இல்லை
கொடுக்க தாயும் இல்லை
படுக்க பாயும் இல்லை
கொடுக்க தாயும் இல்லை
இந்தப் புள்ளை எல்லாருக்கும் சொந்தப் புள்ளை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
பசிக்கு சோறும் இல்லை
குடிக்க நீரும் இல்லை
ஹோய்