உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை
இந்த உலகுக்கே அவள் தான் உமையாம்பிகை
எண்ணங்கள் ஈடேறும் இன்பங்கள் உருவாகும்
இதயத்தில் ஆனந்த குயில் பாடுமே
கோரிக்கையுடன் சென்று காணிக்கை நாம் கொண்டு
கொல்லூர் போனாலே சுகம் கூடுமே
உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை
குறை எல்லாம் பறந்தோட கொடும்பகை மறைந்தோட
கொல்லூர் சன்னதிக்கு வாருங்கள்
குறை எல்லாம் பறந்தோட கொடும்பகை மறைந்தோட
கொல்லூர் சன்னதிக்கு வாருங்கள்
பாவத்தை தீர்க்கின்ற பச்சிலை மருந்தொன்றை
பாவத்தை தீர்க்கின்ற பச்சிலை மருந்தொன்றை
பக்தி என்னும் கண்ணில் பாருங்கள்
உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை
சங்கரர் வழிபட்ட சக்தியின் பெருமைக்கு
தரணியிலே ஈடு கிடையாது
சங்கரர் வழிபட்ட சக்தியின் பெருமைக்கு
தரணியிலே ஈடு கிடையாது
இவள் பேரை சொல்லி குங்குமம் இட்டாலே
இவள் பேரை சொல்லி குங்குமம் இட்டாலே
எடுத்த காரியம் சிதறாது

அம்மா
அம்மா-ஆ-ஆ