Выберите трек для воспроизведения
Сингл / Трек
ஹ்ம் ஹ்ஹ்ஹ்ஹாம் ஹ்ம் ஹ்ஹ்ஹ்ஹாம்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ம்ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம்ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஹே ஹேய் லேயே லேயே
ஹே ஹேய் லேயே லேயே
முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே (ஆஆ)
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம் (ஆஆ)
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று (ஆஆ)
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே(ஆஆ)
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ம்ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம்ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
உஊஊஉ (ரத்தத்த)(லலலால)