புத்தன் சொன்னதை
இயேசு சொன்னதை
காந்தி சொன்னதை மறவாதே
குரான் சொன்னதை
பைபிள் சொன்னதை
கீதை சொன்னதை மறவாதே
அன்பே ஆயுதன்டா
அன்பே ஆண்டவன்டா
அந்தப் பறவையைப் பாரு என்ன தப்பு செய்ததோ
இந்தப் பசுவினைப் பாரு விஷம் தான் தந்ததோ
அகிம்சை நாட்டுக்குள்ளே அன்பு வீட்டுக்குள்ளே வம்புகள் ஏனடா
அன்பே ஆயுதன்டா
அன்பே ஆண்டவன்டா
அன்பு என்ற சாவியை கொண்டு திறக்க முடியாப் பூட்டுக்கள் எதற்கு
அன்பே கடவுள் நம்பிடும் நமக்கு ஆயுதம் எதற்கு
மனிதன் என்றால் பொருள் என்ன அதற்குக்
மனமும் குணமும் இருக்கணும் உனக்கு
மனிதாநேயம் மறந்தது எதற்கு நித்தமும் வழக்கு
நீதி மறந்து சாதியை அணிந்தால் வாழ்க்கை ரணமாகும்
அன்பை ஏந்தி ஆயுதம் துறந்தால் மனிதன் குணமாகும்
இருண்ட வீட்டுக்குள்ளே விளக்கை ஏற்றுபவன் புனிதன் தானடா
அன்பே ஆயுதன்டா
அன்பே ஆண்டவன்டா
வேதம் இங்கே பிறந்தது எதற்கு
பேதமின்றி வாழனும் அதற்கு
கோயில் என்றால் சிலைகளும் எதற்கு நம்பிக்கை அதற்கு
நதிகள் கடலில் கலப்பது எதற்கு
கரையில் பயிர்கள் விளையனும் அதற்கு
கனிகள் இங்கே விளைவது எதற்கு உணவிட நமக்கு
காற்று வீசிடத் தான் அதை மறுத்தால் பூக்கள் புண்ணாகும்
ஊற்று எழுவதை மண் அதைத் தடுத்தால் மனிதன் மண்ணாகும்
பாறை பிளந்து சிறு கொடியும் வளர்ந்து நிற்கும் பாசம் அங்கே பாரடா
அன்பே ஆயுதன்டா
அன்பே ஆண்டவன்டா
புத்தன் சொன்னதை
இயேசு சொன்னதை
காந்தி சொன்னதை மறவாதே
குரான் சொன்னதை
பைபிள் சொன்னதை
கீதை சொன்னதை மறவாதே
அன்பே ஆயுதன்டா
அன்பே ஆண்டவன்டா
அந்தப் பறவையைப் பாரு என்ன தப்பு செய்ததோ
இந்தப் பசுவினைப் பாரு விஷம் தான் தந்ததோ?
அகிம்சை நாட்டுக்குள்ளே அன்பு வீட்டுக்குள்ளே வம்புகள் ஏனடா
அன்பே ஆயுதன்டா
அன்பே ஆண்டவன்டா