Выберите трек для воспроизведения
வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு
வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே
வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
மின்னலுக்கும் மின்மினிக்கும் தகராறா
கண்ணீருக்கு கன்னங்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதி மரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வரவழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதினை கண்டுபிடிக்க
மற்றுமொரு colombus இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுரையா
கரையே இல்லாத கடற்கரையா
வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே