Выберите трек для воспроизведения
லலலல லலலல லலலல
லலலல லலலல
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
அஅஅஅ ஆஆ அஅஅஅ ஆஆ
மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ம்ம்ம் ம்ம்
கண்ணாடி பார்க்கையில
அங்க முன்னாடி உன் முகந்தான்
கண்ணே நீ போகையில
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக