Выберите трек для воспроизведения

Сингл / Трек
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன்
உன் உள்ளமையை நான் உணர்ந்து கொண்டேன்
உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன்
உன் உள்ளமையை நான் உணர்ந்து கொண்டேன்
உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன்
என் உயிரினிலே உன்னை காண்கின்றேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
பேதம் இல்லாமல் யாதினிலும்
உன் பேரருளை நான் பார்க்கின்றேன்
பேதம் இல்லாமல் யாதினிலும்
உன் பேரருளை நான் பார்க்கின்றேன்
பேதமையால் உன்னை நான் மறந்தேன்
அந்த வேதனையால்தான் பாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன்
என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன்
தூயவனே உன்னை துதிக்கின்றேன்
உன் துணையே கதியென பாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
எழிலுக்குள் எழிலாய் இருக்கின்றாய்
என் விழியினுள் ஒளியாய் ஜொலிக்கின்றாய்
இதயத்தை நீயே ஆளுகிறாய்
என்னை இசைத்திடத் தூண்டி ரசிக்கின்றாய்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய்
பெரும் மதியுடன் விளையாடி ஜெயிக்கின்றாய்
மனிதரின் உள்ளத்தைப் பார்க்கின்றாய்
அங்கு தெரிவதைக் கண்டு சிரிக்கின்றாய்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அல்லா ஹூ என அழைக்கின்றேன்
அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன்
அல்லா ஹூ என அழைக்கின்றேன்
அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன்
ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன்
உன் ஆதாரம் நாடி அழுகின்றேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலேதான் பாடுகிறேன்
இறைவா உன்னை தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்