Выберите трек для воспроизведения

வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மர பறவைகளே
பச்சைக் கிளி, நீலக்குயில் சிட்டு போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
(பச்சைக் கிளி, நீலக்குயில் சிட்டு போல பறப்போம்)
(பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்)
வானில் பறக்கும் பறவை கூட்டம்
அன்பென்னும் வெள்ளத்தில் அன்னம் போல் நீந்துங்கள்
அஞ்சாமல் சிங்கம் போல் நில்லுங்கள்
காலம் நமக்கு காத்து கிடக்கு
(காலம் நமக்கு காத்து கிடக்கு)
ஊரெல்லாம் பேர் சொல்ல வாருங்கள்
(லால-லால-லால-லால-லா)
உலகுள்ள வரையில் நிலைபெறும் வகையில்
சரித்திரம் படைத்திடுங்கள்
காந்தித் தாத்தா நேரு போலே நாட்டுக்காக உழைப்போம்
(கன்னித் தமிழ் தன்னை என்றும்)
(அன்னை போல நினைப்போம்)
வானில் பறக்கும் பறவை கூட்டம்
அம்மாவும் அப்பாவும் கண்கண்ட தெய்வங்கள்
அன்றாடம் சேவைகள் செய்யுங்கள்
நாளை நமக்கு நன்மை இருக்கு
(நாளை நமக்கு நன்மை இருக்கு)
நம்பிக்கை ராகத்தை பாடுங்கள்
(லால-லால-லால-லால-லா)
திருக்குறள் விளக்கு ஒளிதர இருக்கு
அதன் வழி நடந்திடுங்கள்
ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஔவை சொல்லி கொடுத்தாள்
தித்திப்பான முத்துப்பாடல் இன்னும் நூறு தொடுத்தாள்
(ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்)
(ஔவை சொல்லி கொடுத்தாள்)
(தித்திப்பான முத்துப்பாடல் இன்னும் நூறு தொடுத்தாள்)
வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மர பறவைகளே
(லா-லால-லால-லால-லல்ல-லா)
(லா-லால-லால-லால-லல்ல-லா)