Выберите трек для воспроизведения
ஐயோ காதலே, நெஞ்சில் மோதலே சில்லாய் சிதறினேனே
மின்னல் தேவதை, கண்ணில் தீ விதை பஞ்சாய் எரிகிறேனே
உன் கால்தடம் பார்த்தே நீ என்கிறேன்
உன் வாசம் திசை காட்ட உடன் போகிறேன்
எவன் உன்னை பார்த்தாலும் உயிர் வேர்க்கிறேன்
அவனை நீ பார்க்காத வரம் கேட்கிறேன்
சாகாமல் நான் சாகிறேன்
அவ பார்வ உசுர குடிக்குதே, அட தனியா நடக்க புடிக்குதே
அளவில்லா கிறுக்கு பிடிக்குதே, அணுகுண்டா இதயம் வெடிக்குதே
அடங்காம வயசு துடிக்குதே, அரகொறையா மீச மொளைக்குதே
அடமழையும் மெல்ல அடிக்குதே, அசல் அழகு என்ன முடிக்குதே
நீ அணிந்த ஆடை இரவு வானம்
உன் முகமும் அதனில் நிலவு கோலம்
நீ சிரிக்கும் நேரம் எனக்குள் நானம்
உன் நினைவு கொதிக்க தவிப்பில் நானும்
என் கண்கள் உனை பார்க்க தினம் ஏங்குதே
உன் பார்வை எனைத் தாக்க பயம் கூடுதே
உன் நெஞ்சை வெல்ல, என் ஆசை சொல்ல