Выберите трек для воспроизведения

அண்டத்துக்கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி
அண்டத்துக்கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்க படாதானடி
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி
தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் மேதுக்கடி குதம்பாய்
தேவாரம் மேதுக்கடி
என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி
நின்றது பிரம்மமடி குதம்பாய்
நின்றது பிரம்மமடி
என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி
நின்றது பிரம்மமடி குதம்பாய்
நின்றது பிரம்மமடி