Выберите трек для воспроизведения
அய்யா கலரே கலர் வாசம்
கலரே கலர் வாசம் கார்த்திகையும் பூ வாசம்
இந்த சண்டாள சீமையிலே நீ விட்டு போனதுதான்
என் மனச ரம்பம் போட்டு அறுக்குதய்யா
நீ போன இடம் பெரிய எடம், பெரிய எடம்
புண்ணியவான் வாழும் எடம்
தேடும் எடம் கெடைக்கலன்னு, தேடும் எடம் கெடைக்கலன்னு
தேம்பலையே, என் ராசா
தாளமுள்ளு பள்ளத்துக்கு
பள்ளத்துக்கு தல முழுக போனதென்ன?
அய்யா தல முழுக போனதென்ன?
தாளமுள்ளு தச்சதின்னு, தாளமுள்ளு தச்சதின்னு
தல சாஞ்ச மாயமென்ன?
அய்யா தல சாஞ்ச மாயமென்ன?
அய்யா பாக்கமெச்ச அரமனையும்
அரமனையும் பஞ்சாங்க சாவடியும்
ஒனக்கு பஞ்சாங்க சாவடியும்
சேக்கனுன்னு நெனச்சவரே, சேக்கனுன்னு நெனச்சவரே
ஆறடிதான் பஞ்சு மெத்த
ஒனக்கு ஆறடிதான் பஞ்சு மெத்த
அய்யா தேசாதி தேசமெங்கும்
தேசமெங்கும் கோட்ட கட்ட நெனச்ச பாவி
அய்யா கோட்ட கட்ட நெனச்ச பாவி
ஆறடி கோட்ட இப்போ
இந்த ஆறடி கோட்ட இப்போ
நீட்டி படுக்க நிம்மதியோ?
நீ நீட்டி படுக்க நிம்மதியோ?
அய்யா நீட்டி படுக்க நிம்மதியோ?
என் அய்யா, என் அய்யா, என் அய்யா
என்ன பெத்த அய்யன்