Выберите трек для воспроизведения
Сингл / Трек
தந தாநா நீ தாநீ நாநீ தா ந நன் நன் நா
தந தாநா நீ தாநீ நாநீ தா ந நன் நன் நா
ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும்
செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது
கண்ணீர் துளிகள்
ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
வளர்ந்து வாராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வாராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம்
என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம்
என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழுக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்
ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டறையா
விடிந்த பின்னும் நித்திரையா
வரம்பு கடந்து
நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து
நரம்பு தளர்ந்து
வயதை தொலைத்து வாழ்வதா
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது
ஒரு பண்பாடு இல்லையென்றால்
பாரதம் இல்லை
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை