Сингл / Трек
ஒரு கண்ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா? மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும், அவள் செய்யும் மாயம் ஓயாதே
ஒரு கண்ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னகைத்தாள் மெய் மறந்தேன்
ஆசையெல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே, உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம்
காதல் ஒன்றுதான், இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
Okay
ஒரு கண்ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தொடரும் போட்ட கதையை போலே இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக் காணா நாட்கள் எல்லாமே கருப்பு, வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே, உன் மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம், முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி
Come on
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா? மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும், அவள் செய்யும் மாயம் ஓயாதே
நான, நன்-நான, நன்-நானா
நான, நன்-நான, நன்-நானா
நான, நன்-நான, நன்-நானா
நான, நன்-நான, நன்-நானா