Выберите трек для воспроизведения
Сингл / Трек
எச காத்தா நெஞ்சுல-நெஞ்சுல நீ சுதி ஏத்த
நெற மாச அம்புலி அம்புலியா தெனம் பூத்த
முத்துனவ ரத்தினமா தூறல் கொட்டுதம்மா
ஆச கத்திரி போல வெட்டுது தேகம் கூச
ஆத்தி வெட்கம் படாம எப்படி நானும் பேச
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போனபோதும் வா நிக்கிறேன் கூட
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போனபோதும் வா நிக்கிறேன் கூட
அன்புல ஊஞ்சல் ஆடி நெஞ்சுல தூங்க வேணும்
கண்டத பேசுனாலும் மந்திரம் போல தோணும்
பாவி உன்ன நானும் பார்த்தா பசி தீரும்
ஊமவேயில் கூட ஊசி மழ தூரும்
வேகும் வெக்கையிலும் சோகம் தைக்கையிலும்
அன்புதான் எப்பவும் வைக்குதே வத்ததம்
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போனபோதும் வா நிக்கிறேன் கூட
சந்திரனோட சாயல் ஒன் மொகம்தானே தாயி
உன்னைய தாண்டி வேற சொல்லிடுமோ என் வாயி
கூட்டிகழிக்காத காதல் வரமாகும்
கூட்டு முனிவாணி கூட இரு போதும்
பாசம் பொங்கி வரும் கோயில் தங்க ரதம்
இன்பமே கொட்டுதே கண்ணையே கட்டுதே
எச காத்தா நெஞ்சுல-நெஞ்சுல நீ சுதி ஏத்த
நெற மாச அம்புலி அம்புலியா தெனம் பூத்த
முத்துனவ ரத்தினமா தூறல் கொட்டுதைய்ய
ஆச கத்திரி போல வெட்டுது தேகம் கூச
ஆத்தி வெட்க படாம எப்படி நானும் பேச
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போனபோதும் வா நிக்கிறேன் கூட
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போனபோதும் வா நிக்கிறேன் கூட